ஆண் போல் நடித்து இரண்டு பெண்களை திருமணம் செய்து, பணத்தை சுருட்டி ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நைனிடாலாவை சேர்ந்த தொழிலதிபரின் மகள், கிருஷ்ணா சென் என்பவரை பேஸ்புக் மூலமாக காதலித்தார். பின்னர், இருவரது வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார். அவர்களின் முதலிரவின்போது போதுதான் தன்னை திருமணம் செய்துக் கொண்டது ஆண் இல்லை பெண் என்றும், தன்னை பணத்திற்காக ஆண் போல் நடித்து ஏமாற்றியதும் தெரியவந்தது. இந்நிலையில், கிருஷ்ணா சென் என்கிற ஆண் போல் நடித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிக்னோர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்வீட்டி. பணத்திற்காகவும் சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காகவும் தனது பெயரை கிருஷ்ணா சென் என மாற்றிக் கொண்டு ஆணாக தன்னை பாவித்துக் கொண்டார். தனது சிகை அலங்காரத்தையும் உடைகளையும் ஆண்களை போலவே மாற்றிக் கொண்டார். இதன் பின்னர், முகநூலில் போலி கணக்கு ஒன்றை தொடங்கி, பெண்களை காதலில் விழ வைத்துள்ளார்.
இதில் விழுந்த ஒரு பெண் தான் நைனிடாலை சேர்ந்த தொழிலதிபரின் மகள். இருவரும் காதலித்து திருமணமும் செய்துக் கொண்டனர். திருமணத்தின்போது, ஸ்வீட்டி இரண்டு பேரை போலியாக பெற்றோர் என நடிக்க வைத்து கடந்த 2014ம் ஆண்டில் திருமணத்தை முடித்துள்ளார். பின்னர், ஆன்லைனில் செயற்கை ஆணுறுப்புகளை வாங்கி உடலுறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது தான், தன்னை திருமணம் செய்துக் கொண்டது ஆண் இல்லை பெண் என்பது அவருக்கு தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் இதுகுறித்து வெளியில் கூற முடியாமல் தவித்து வந்தார். மேலும், வரதட்சணை கேட்டு ரூ.8.5 லட்சம் வரை பணம் பறித்துள்ளார். இதேபோல், பேஸ்புக் மூலம் மற்றொரு பெண்ணையும் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். ஸ்வீட்டியின் தொல்லை தாங்க முடியாமல் மனைவி இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ஸ்வீட்டியை கைது செய்துள்ளனர்.
இந்த பலே பெண் நூதனமாக செயல்பட்டு பணத்தை பறித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.