ஜெயலலிதா நினைவிடத்தில் பரபரப்பு: ஆயுதப்படை காவலர் தற்கொலை

Mar 4, 2018, 08:09 AM IST

சென்னை: மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் திடீரென் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதிக்கு பின்புறத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனால், ஜெயலலிதாவின் சமாதியை பார்க்க தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு இடங்களில் இருந்து வருகின்றனர்.

ஜெயலலிதா சமாதியை காண எப்போதும் கூட்டம் இருப்பதால் அங்கு ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று ஆயுதப்படை போலீஸ் அருள் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர் திடீரென அவர் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

சம்பவம் நடந்து இடத்திற்கு காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் சென்று தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading ஜெயலலிதா நினைவிடத்தில் பரபரப்பு: ஆயுதப்படை காவலர் தற்கொலை Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை