அயனாவரத்தில் பயங்கரம்: பணியில் இருந்தபோது துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ தற்கொலை

Mar 7, 2018, 12:18 PM IST

சென்னை: அயனாவரத்தில் இரவு பணியில் இருந்தபோது எஸ்.ஐ சதீஷ் இன்று காலை திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அயனாவரம் போலீஸ் ஸ்டேஷனில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சதீஷ் (28). இவர், நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை பணியில் இருந்தபோது சதீஷ் திடீரென அவர் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சை மாவட்டம் மேயூரைச் சேர்ந்த சதீஷ் டி.பி.சத்திரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சதீஷ் இன்று அதிகாலை போலீஸ் ஸ்டேஷனின் வாயிலில் நின்றபடி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். எனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை எனவும் அவர் கடிதம் எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாசன் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில், மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப் படை போலீசார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், மீண்டும் எஸ்.ஐ சதீஷ் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More Crime News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை