சிறுமிக்கு பாலியல் தொல்லை: அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு..

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனுக்கு ஜாமீன் வழங்க மூன்றாவது முறையாக உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது .

by Balaji, Oct 28, 2020, 17:12 PM IST

குமரி மாவட்டம் கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுமியை காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரியவந்தது அவரை கண்டுபிடித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சேர்த்தனர் அப்போது அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ காஞ்சிபுரம் உட்பட சிலர் தனக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தனர் என தெரிவித்தார். இதை தொடர்ந்து அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு முருகேசன் கைது செய்யப்பட்டார்.

அவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். தமது மனுவில்," 2017 ஆம் ஆண்டு முதல் நான் பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிடும் நிலையில் அப்போது எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை. ஏதோ உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜோடிக்கப்பட்ட வழக்காக உள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பது, தலைமறைவாவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நாஞ்சில் முருகேசனுக்கு ஜாமீன் கொடுப்பதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கைது செய்யப்பட்டு 90 நாட்களை கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என முருகேசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி மனுதாரர் கீழமை நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்..

You'r reading சிறுமிக்கு பாலியல் தொல்லை: அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை