100 ரூபாய் சாக்லேட் வாங்கி கொடுத்து பள்ளி மாணவியை கர்ப்பம் ஆக்கிய ஆசாமி..!

by Logeswari, Nov 11, 2020, 12:36 PM IST

திருச்சியில் 100 ரூபாய் சாக்லேட்டுக்கு ஆசைப்பட்டு 17 வயது சிறுமி கர்ப்பம் ஆகிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருச்சியில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர் சுமதி. இவருக்கு 17 வயதில் ஒரு சிறுமி உள்ளார். இவர் 11 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். மேலும் படிக்க வசதி இல்லாததால் படிப்பை நிறுத்தி விட்டு வீட்டிலே இருந்துள்ளார். திடீரென சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பெற்றோர்கள் சிறுமியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிறுமியை சோதனை செய்து விட்டு 3 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை குறித்து பெற்றோர்கள் போலீஸில் புகார் அளித்தனர். போலீஸ் அந்த சிறுமியை விசாரித்த போது சிறுமியும் அவருடன் 11 ஆம் வகுப்பு பயின்ற கோகுலக்கண்ணன் என இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

அப்பொழுது ஒன்றாக வெளியே சென்ற போது இருவரும் எல்லை மீறி விட்டதாக கூறினார். அச்சிறுமி கொடுத்த அடையாளத்தின் பேரில் அந்த சிறுவன் படித்த பள்ளியில் விசாரித்தபோது கோகுலக்கண்ணன் என்ற பெயரில் யாரும் அந்த பள்ளியில் படிக்க வில்லை என்பது தெரியவந்தது. மறுபடியும் அந்த சிறுமியிடம் தீவிரமாக விசாரித்த பொழுது பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். அதாவது சிறுமியுடன் 9வது வகுப்பு பயின்ற யுவராஜ் என்பவர் சிறுமியிடம் காதலை தெரிவித்துள்ளார். முதலில் மறுத்த சிறுமி யுவராஜ் 100 ரூபாய் காதலுக்கு அடையாளமான டைரி மில்க் சாக்லேட்டை வாங்கி தந்தவுடன் அவரது காதலை ஏற்று கொண்டுள்ளார். இது போல் யுவராஜ் சிறுமியை பார்க்கும் பொழுதெல்லாம் சாக்லேட் வாங்கி தந்து ஆசையாக பேசி அந்த சிறுமியிடம் யுவராஜ் பலமுறை எல்லை மீறியுள்ளார். போலீஸ் யுவராஜை கண்டுபிடித்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

More Crime News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை