தேனியில் நிறைமாத கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் வயிற்றில் எட்டி உதைத்து கொலை செய்த கணவனுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூரை சார்ந்தவர் சுரேஷ். இவர் ஆண்டிபட்டியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகளான கற்பகவல்லியை 10 ஆண்டு முன்னர் திருமணம் செய்துகொண்டார். பிறகு குடுப்பத்துடன் மேகமலையில் குடி பெயர்ந்து வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் கற்பகவல்லி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்துள்ளார். சுரேஷ் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் நின்று வெற்றி வாகையை சூடினார். தேர்தலில் வெற்றி பெற்ற சுரேஷ் ஆளே மாறிவிட்டார். எப்பொழுதும் பெண்கள் சவகாசம், போதை என்பது போலவே பயங்கர உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருந்தார். இதனால் கற்பகவல்லி சுரேஷிடம் தினமும் சண்டை பிடித்துள்ளார்.
சம்பவ தினத்தன்று சுரேஷ் குடிபோதையில் இருந்ததால் இருவருக்கும் சண்டை முத்தியது. அப்போது சுரேஷ் கோவத்தில் நிறைமாத கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் கற்பகவல்லியின் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். இதனால் கற்பகவல்லி மற்றும் வயிற்றில் இருந்த சிசு இரண்டு உயிருமே இறந்துவிட்டது. இந்த வழக்கு தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டு இருந்தது. இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணை முடிந்த பிறகு சுரேஷுக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.