``போலீஸ் என்வுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்படுவார்கள்.. பாஜக தலைவர் சர்ச்சை பேச்சால் எழுந்த சலசலப்பு!

by Sasitharan, Apr 6, 2021, 18:10 PM IST

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மேற்குவங்க பாஜக தலைவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேற்குவங்கத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், மேற்கு வங்காளத்தின் பிர்பும் மாவட்ட பா.ஜனதா தலைவரான துருவா சகா, நேற்று முன்தினம் நானூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மே 2-ந்தேதி மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியமைக்கும். நாட்டுக்கு துரோகம் செய்பவர்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்புபவர்கள் ஆகியோர் போலீஸ் என்வுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்படுவார்கள்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது இந்த பேச்சு வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. பின்னர் இது சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. பாஜக மாவட்ட தலைவரின் இந்த பேச்சுக்கு பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இது மாநிலத்தில் பெரும் சர்ச்சையையும் உருவாக்கி இருக்கிறது.

இதைத்தொடர்ந்து துருவா சகாவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் இந்த விவகாரத்தில் 24 மணி நேரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

முன்னதாக பிர்பும் மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் பிரமுகர் ஒருவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் உரை ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கொடியுடன் நிற்கும் அந்த ஆதரவாளர்களிடம் அவர், இந்தியாவின் 30 சதவீத முஸ்லிம்களும் இணைந்தால் 4 பாகிஸ்தானை உருவாக்க முடியும் என்று கூறுகிறார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அவர் தங்கள் கட்சி தொண்டர் அல்ல என திரிணாமுல் காங்கிரஸ் கூறியிருந்தது குறிப்பிட்டத்தக்கது.

You'r reading ``போலீஸ் என்வுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்படுவார்கள்.. பாஜக தலைவர் சர்ச்சை பேச்சால் எழுந்த சலசலப்பு! Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை