பல ஆண்களுடன் தொடர்பு டார்ச்சர் செய்த கணவன் – போட்டு தள்ளிய மனைவி!

by Madhavan, Apr 19, 2021, 15:11 PM IST

கள்ளகாதல் விவகாரத்தில் கணவனை மனைவி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசையைச் சேர்ந்தவர் 33 வயதான அபிராமி. அழகுக்கலையகம் நடத்தி வரும் இவரது முதல் கணவன் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் அச்சன்புதூரை சேர்ந்த 20 வயதான காளிராஜ் என்பவருக்கும் அபிராமிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. காளிராஜின் விருப்பத்தின் பேரில் 2017ம் ஆண்டு காதலர்களுக்குத் திருமணம் நடந்துள்ளது. குத்துக்கல்வலசையில் தம்பதி வசித்து வந்தனர். 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் காளிராஜைக் காணவில்லை. இதுகுறித்து அவரது தாய் கேட்டபோது தன்னிடம் சண்டை போட்டு விட்டு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக அபிராமி பதிலளித்து சமாளித்துள்ளார்.

தென்காசி காவல்நிலையத்தில் காளிராஜின் தாய் புகாரளித்தார். அபிராமியிடம் துருவித் துருவி விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. அபிராமிக்கு பல ஆண்களுடன் கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் பெயரளவுக்கு கணவன் என்ற பெயரில் காளிராஜை அவர் திருமணம் செய்தார்.மனைவியின் அத்துமீறல்கள் தெரியவந்த உடன் காளிராஜ் கண்டித்துள்ளார். தொடர்புகளை அபிராமி துண்டிக்காவிட்டால் ஊரில் சொல்லி விடுவதாக மிரட்டியுள்ளார் காளிராஜ். காளிராஜின் நெருக்கடி தாங்க முடியாத அபிராமி தனது ஆண் நண்பர்களிடம் கூறி காளிராஜைத் தீ்ர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார்.

அதையடுத்து தான் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அபிராமி, அவரது நண்பர் மாரிமுத்து மற்றும் சிலர் சேர்ந்து காளிராஜைக் கொலை செய்துள்ளனர். பின்னர் வீட்டு வாசலில் குழிதோண்டி சடலத்தைப் புதைத்துள்ளனர்.

அந்த இடத்தில் தளக்கல் பாவி, அதன் மீது துளசி மாடத்தையும் வைத்து விட்டார் அபிராமி. அபிராமி சொன்ன இடத்தில் போலீசார் ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டிப் பார்த்த போது காளிராஜின் எலும்புகள் மட்டும் அகப்பட்டன. மீட்கப்பட்ட எலும்புகள், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொலை வழக்கில் அபிராமி, மாரிமுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரைப் போலீசார் தேடி வருகின்றனர்.You'r reading பல ஆண்களுடன் தொடர்பு டார்ச்சர் செய்த கணவன் – போட்டு தள்ளிய மனைவி! Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை