காதலை எதிர்த்தான் கொலை செய்தேன் – அண்ணனை கொன்ற நடிகை கைது!

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்வாப்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலையில்லாமல் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் உடல் கிடந்தது. இதுபற்றி கேஷ்வாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபரை யாரோ மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி காரில் கொண்டு வந்து சாலையோரம் வீசிவிட்டு சென்றிப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. படுகொலை செய்யப்பட்டது மிஸ் கர்நாடகா அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், நடிகையுமான ஷான்யா காடவேயின் அண்ணன் ராகேஷ் என்பது தெரியவந்தது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் கூறுகையில், மும்பையில் வசித்து வரும் நடிகை ஷான்யா தனது மேலாளர் நியாஜ் அகமது என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இது ஷான்யாவின் அண்ணன் ராகேசுக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து அவர் ஷான்யாவிடம் கேட்டு கண்டித்துள்ளார்.

இதனால் ராகேசை கொலை செய்ய ஷான்யா முடிவு செய்தார். இதுகுறித்து அவர் தனது காதலன் நியாஜ் அகமதுவிடம் தெரிவித்தார். அவரும், இந்த கொலை திட்டத்திற்கு ஒப்புக் கொண்டார். அதையடுத்து அவர்கள் கூலிப்படையை ஏவி ராகேசை கொலை செய்ய முடிவு செய்தனர்.

அதன்பேரில் கடந்த 9-ந் தேதி ராகேசை கூலிப்படையைச் சேர்ந்த தவுசிப் அகமது உள்ளிட்டோர் காரில் கடத்தி படுகொலை செய்தனர். பின்னர் அவரது கை, கால்களையும், தலையையும் துண்டு, துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிவிட்டு காரிலேயே தப்பிச் சென்றுவிட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்தி நடிகை ஷான்யாவையும், அவரது காதலன் நியாஜ் அகமதுவையும் போலீசார் கைது செய்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
Tag Clouds