மின் கட்டணம் ரூ.8 லட்சமா ? அதிர்ச்சியில் வியாபாரி தற்கொலை

May 11, 2018, 09:29 AM IST

மின்சார கட்டணம் ரூ.8 லட்சத்திற்கு வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான காய்கறி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தின் புந்த்லி நகரில் உள்ள பாரத் நகரை சேர்ந்தவர் ஜெகநாத் ஷெல்கி (36). இவர், அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தார். இவரது கடைக்கு தோராயமாக ஆயிரம் ரூபாய்க்கு மின்கட்டணம் வந்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில், இந்த மாத மின் கட்டணத்தை பார்த்து ஷெல்கி அதிர்ச்சியடைந்தார். அவரது கடைக்கு ரூ.8 லட்சத்திற்கு மின்கட்டணம் வந்தது. இதனால் மன உசைச்சலுக்கு ஆளான ஷெல்கி, இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு பல முறை அலைந்துள்ளார். இந்த மின் கட்டணத்தை கட்டியே ஆக வேண்டும் என்று அதிகாரிகள் கூறிவிட்டனர். இதனால், மேலும் மனமுடைந்த ஷெல்கி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இரண்டாயிரம் ரூபாய்க்கு வந்த மின் கட்டணத்தை ரூ.8 லட்சம் என தவறாக குறித்திருந்தது பின்னர் தெரியவந்தது. இதனால், ஷெல்கியின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மின் அளவை தவறாக பதிவிட்ட ஊழியரை சஸ்பெண்ட் செய்துவிட்டதாக மின்வாரி அதிகாரிகள் தெரிவித்தனர். தவறான மின் அளவை குறிப்பிட்டதால் அநியாயமாக ஒரு உயிர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மின் கட்டணம் ரூ.8 லட்சமா ? அதிர்ச்சியில் வியாபாரி தற்கொலை Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை