உகாண்டாவில், டிராக்டர் மற்றும் லாரி மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உகாண்டாவில், சாலை போக்குவரத்து சரியாக பராமரிக்கப்படாததால் அங்கு, அடிக்கடி விபத்துகள் ஏற்படும். கடந்த 2015&2017ம் ஆண்டில் மட்டும் 9500க்கும் மேற்பட்டோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உகாண்டாவின் வடக்கு பகுதியில் உள்ள கிர்யாடோங்கோ என்ற பகுதியில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த டிராக்டரும் பேருந்து வேகமாக மோதியது. தொடர்ந்து, பீர் பாட்டில்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி மீதும் பேருந்து மோதியது. இதில், 16 குழந்தைகள் உள்பட 48 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருட்டான சாலையில், டிராக்டரில் விளக்கு எரியாமல் வந்ததால், எதிரே வருவது தெரியாமல் பேருந்து மோதியதே விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com