கிணற்றில் குளித்ததால் ஆத்திரம்: தலித் சிறுவர்களை தாக்கி நிர்வாண ஊர்வலம்

Jun 15, 2018, 13:02 PM IST
மகாராஷ்டிரா மாநிலம் ஜெல்கோன் மாவட்டத்தின் வகாதி கிராமத்தில் ஜூன் 10 தேதி ஞாயிறு அன்று 3 சிறுவர்கள் அருகில் உள்ள தோட்டத்திற்கு விளையாட சென்றுள்ளனர். அங்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து விளையாடி ஆட்டம் போட்டுள்ளனர். இதனை கண்ட அந்த தோட்டத்து உரிமையாளர். முதலில் சிறுவர்களை கண்டித்துள்ளார். 
மேலும் சிறுவர்களிடம் விசாரித்து அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்ற தகவலை கேட்டறிந்துள்ளார். அவர்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவலை அறிந்ததும் சிறுவர்களை அவமான படுத்தும் வகையில்,  துணிகள் அணிய விடாமல், அவர்களை நிர்வாணமாக அருகில் உள்ள தெருக்களில் ஊர்வலமாக நடக்கவைத்துள்ளனர். இதனை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவியதால், இப்படி ஒரு கொடுமை 3 சிறுவர்களுக்கு நடந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
 
மனிதாபிமானமின்றி 3 சிறுவர்களை அங்குள்ள சாதிவெறி பிடித்தவர்கள் இப்படி நிர்வாண ஊர்வலம் இழுத்து சென்றுள்ளது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You'r reading கிணற்றில் குளித்ததால் ஆத்திரம்: தலித் சிறுவர்களை தாக்கி நிர்வாண ஊர்வலம் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை