பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில், ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் பயங்கரமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
தெற்கு பிரான்ஸின் மிலாஸ் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை பள்ளியின் வேன் ஒன்று, நேற்று காலை மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, பயர்னீஸ் பகுதியில் உள்ள ஆளில்லா லெவல் கிராசிங்கை நோட்டமிட்ட வேன் டிரைவர், ரயில் வருவதற்குள் சென்று விடலாம் என்று நினைத்து வேனை ஓட்டினார்.
அப்போது, வேகமாக வந்த ரயில் பள்ளி வேன் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட வேன் நொருங்கியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், வேனுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். அப்போது, சம்பவ இடத்திலேயே 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
மேலும், 20க்கும் மேற்பட்ட மாணவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.