ஆந்திராவில் தந்தை வெறிச்செயல்: பெற்ற மகளை கோடாரியால் அடித்துக்கொலை

by Isaivaani, Jul 3, 2018, 09:33 AM IST

ஆந்திராவில், காதலனிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த தந்தை மகளை கோடாரியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர பிரதேசம் மாநிலம் தோட்டரவுலபாடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் கோட்டையா. இவரது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு உடன் படிக்கும் மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

ஆனால், இவரது காதலுக்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும், அவரை தான் திருமணம் செய்துக் கொள்வேன் என அடம்பிடித்து காதலை தொடர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மகளின் பிறந்தநாளுக்கு கோட்டையா செல்போன் ஒன்றை பரிசாக வழங்கினார். இதனால், மகள் மகிழ்ச்சியடைந்தார்.
செல்போன் கிடைத்த உற்சாகத்தில், கடந்த சனிக்கிழமை அவரது காதலனுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை, அவரது தந்தை கோட்டையா நேரில் பார்த்துவிட்டார். மேலும், இதுகுறித்து மகளிடம் கோட்டையா விசாரித்தபோது அவர் காதலனுடன் செல்போனில் உரையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. பின்னரும், காதலனை தான் திருமணம் செய்துக் கொள்வேன் என வீம்பாக கோட்டையாவிடம் கூறினார்.

இதனால், ஆத்திரமடைந்த கோட்டையா அருகில் இருந்த கோடாரியால் மகளை பலமாக தாக்கினார். இதில், மகள் அந்தே இடத்திலேயே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தந்தை கோட்டையாவையும் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Crime News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை