சென்னையில் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Jul 16, 2018, 21:21 PM IST

சென்னையில் 12 வயது சிறுமியை 17 பேர் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Harassment

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த 30 ஆண்டுகளாக டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.

அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் . மூத்த மகள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். இரண்டாவது மகள் சென்னையில் உள்ள பிரபலமான பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

மூத்தமகள் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தபோது, அவரிடம் சிறுமி அதிர்ச்சிகரமான தகவலை கூறியிருக்கிறார். அதாவது கடந்த 5 மாத காலமாக அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள எட்டு லிப்ட் ஆப்ரேட்டர்கள், ஆறு காவலாளிகள், அந்த அப்பார்ட்மெண்டுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய வருகிறவர்கள், எலெக்ட்ரீஷியன்கள் என 17 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி அக்காவிடம் தெரிவித்திருக்கிறார்.

மேலும், நடந்ததை வெளியே கூறாமல் இருக்க போதை ஊசி போடப்பட்டதாகவும், பலமுறை கத்தி முனையில், தான் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் சிறுமி கூறியிருக்கிறார். இதனை மூத்த மகள் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அதிர்ச்சியில் உறைந்த சிறுமியின் பெற்றோர், அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். உடனடியாக அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்த போலீசார், 17 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், போக்ஸோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காது கேட்காத, சரியாக வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான 12 வயது சிறுமி 17 நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெற்றோர்களே மிகவும் கவனமாக இருங்கள்... தங்கள் பெண் பிள்ளைகளை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்ளுங்கள் என்று www.thesubeditor.com அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

You'r reading சென்னையில் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை