வீட்டில் யூ டியூப் வீடியோவை பார்த்து பிரசவம்: பெண் பரிதாப பலி

Jul 26, 2018, 14:13 PM IST

திருப்பூரில், பெண் ஒருவர் யூ டியூபில் பார்த்து, பிரசவம் செய்துக் கொண்ட பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் புதுப்பாளையம் அருகே உள்ள ரத்தின கிரீஸ்வரர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (34). இவர மனைவி கிருத்திகா (28). தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், கிருத்திகா இரண்டாவது முறையாக கர்ப்பமானார். கரு உறுதியான நாள் முதல் கிருத்திகா சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக, சமூக வலைத்தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள்படி உணவு, உடற்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கிருத்திகாவுக்கு கடந்த 22ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, கார்த்திகேயன் தனது நண்பருக்கு போன்று செய்து அழைத்துள்ளார். பின்னர், நண்பர் தனது மனைவியுடன் கார்த்திகேயன் வீட்டிற்கு வந்து யூ டியூப் வீடியோக்களை பார்த்து கிருத்திகாவுக்கு சுகப்பிரசவம் செய்துள்ளனர். இதில், கிருத்திகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிரசவ நேரத்தில் கிருத்திகாவிற்கு அதிகளவில் ரத்தம் வெளியேறியது. இதனால், மயக்கமடைந்த கிருத்திகா மற்றும் குழந்தையை உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள் கிருத்திகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தை நலமாக இருக்கிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், கிருத்திகாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து மாநகராட்சி நகர்நல அதிகாரி திருப்பூர் போலீசில் புகார் செய்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்த விருகின்றனர்.

More Crime News


அண்மைய செய்திகள்