கருணாநிதியை பார்க்க திரண்ட தொண்டர்களிடம் பிக்பாக்கெட்: 13 பேர் கைது

Jul 31, 2018, 16:54 PM IST

திமுக தலைவர் கருணாநிதியை அனுமதிக்கப்பட்டிருக்கும் காவேரி மருத்துவமனையின் எதிரே திரண்டிருந்த கூட்டத்தில் பிக்பாக்கெட் அடித்த 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் நிலைக் குறைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல் நிலை மோசமானதாக தகவல் கேள்விப்பட்டு திமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையின் வெளியே குவிந்தனர். இதனால், அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளனர்.

இருப்பினும், கூட்ட நெரிசல் அதிகம் இருந்த காரணத்தால் பிக் பாக்கெட் சம்பவங்கள் அதிகளவில் நடந்துள்ளது. குறிப்பாக, கட்சி தொண்டர்கள், பத்திரிக்கையாளர்களின் பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடுப் போய் உள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து பலர் போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து. போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், சந்தேகத்தின் பேரில் சுற்றித்திருந்த சுமார் 13 பிக்பாக்கெட் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

More Crime News


அண்மைய செய்திகள்