தென்னிந்தியாவை கலக்கிய கொள்ளை கும்பல்....3 பேர் கைது

Aug 17, 2018, 23:28 PM IST
தென்னிந்தியாவை கலக்கிய கொள்ளை கும்பல் தலைவனின் முக்கிய கூட்டாளி உட்பட 3 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். 
சென்னை அண்ணாநகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக 17-க்கும் அதிகமான வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது.  இது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். 
 
இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மணிகண்டன், கோபால், மூர்த்தி, ரகுராம் ஆகியோரை கடந்த மே, ஜூலை மாதங்களில் அடுத்தடுத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து முக்கால் கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி, கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.
 
விசாரணையில் அவர்கள் மிகப் பெரிய கொள்ளை கும்பல் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள்  தென்னிந்தியாவை கலக்கி வரும் பிரபல கொள்ளையன்  திருவாரூர் முருகன், தினகரன் ஆகியோர் தலைமையில்  இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு குழு போல செயல்பட்டு கொள்ளை சம்பவங்களை சென்னை அண்ணாநகரில் அரங்கேற்றி வந்துள்ளார். இந்த குழுவுக்கு இரண்டாம் கட்ட தலைவராக நெல்லையை சேர்ந்த தினகரன் செயல்பட்டு வந்துள்ளார்.
 
அண்ணாநகரில் 17-க்கும் மேற்பட்ட வீடுகளில் நடந்த கொள்ளைகளில் , கடைசியாக ஏப்ரல் மாதம் அண்ணாநகர் டி பிளாக்கில் சுதர்சன ராவ் என்பவரது வீட்டில் 1 கோடி வரை வைர தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து தான் அண்ணாநகர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
 
மறு நாள் கொள்ளையடித்த இடத்திற்கு காரில் வந்த கும்பலை போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினர். ஆனால் அவர்களிடம் இருந்து மூன்று செல்போன்களை பறிமுதல் செய்தனர். அந்த போன்களை வைத்தது முதற்கட்டமாக 4 பேரை கைது செய்து சிறையில் தள்ளினர்.
 
இந்நிலையில் திருவாரூர் முருகனின் நெருங்கிய கூட்டாளியாக இருக்ககூடிய நெல்லையைச் சேர்ந்த தினகரனை போலீசார் கைது செய்தனர். நெல்லை சென்று அங்கு வைத்து கைது செய்து சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தியதில் கொள்ளை நகைகளை வாங்கி விற்று கொடுக்கும் கொள்ளையர்களுக்கு தரகர்களாக செயல்பட்டு வந்த லோகநாதன், காளிதாஸ் என்பவர்களை கைது செய்தனர். 
 
இவர்களிடமிருந்து 3 கிலோ தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி நகைகள், 2 வாக்கி டாக்கிகள், கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றும் 1000 யூரோ டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
 
கைதானவர்கள் காவல்துறையிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். கொள்ளையடிக்கும் போது இவர்கள் செல்போன்களை பயன்படுத்தினால் போலீசார் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் திருவாரூர் முருகன் மற்றும் தினகரன் ஆகிய இருவர் வாக்கி டாக்கி மூலம் கொள்ளையடிக்க வேண்டிய தகவல்களை பறிமாறிக் கொள்வார்கள் என போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் இவர்கள் அண்ணா நகர் பகுதியில் அதிகாலை எழு மணி அளவில் முதல் சுற்று நோட்டம் விடுகின்றனர். ஒரு சிறு துண்டு சீட்டில் எத்தனை வீடுகள அதிகாலை நேரத்தில் மூடி இருக்கின்றன என்பதை குறித்துவைத்து கொள்கின்றன். பின்னர் இரண்டாம் சுற்று நோட்டத்தில் எத்தனை வீடுகள் மூடி இருக்கினறன என்பதை குறித்து வைத்து கொள்கின்றனர். 
பின்னர் மூன்றாவது சுற்றில் மூடப்பட்ட வீடுகள் திறந்து இருந்தால் அவற்றை  அடையாளம் செய்து  5 முறை நோட்டமிட்ட பின்பு இறுதியாக மூடி இருக்கும் வீடுகளில் அன்று இரவே கொள்ளை சம்பவத்தை ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 
 
கொள்ளையடித்த பொருட்களுடன் வெளி மாநிலங்களுக்கு தப்பி ஒடி விடுவதுதான் இவர்களுடை பாணி என தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த வழக்கில் தென்னிந்தியாவை கலக்கி வரும் முக்கிய கொள்ளையன் திருவாரூர் முருகனை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading தென்னிந்தியாவை கலக்கிய கொள்ளை கும்பல்....3 பேர் கைது Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை