சேலம் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உடல்நசுங்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அருகே சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை மாமாங்கம் என்ற இடத்தில் பெங்களூருவில் இருந்து ஏற்காடு வந்த பேருந்தும், சேலத்தில் இருந்து தர்மபுரி சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு பெரும் விபத்தை சந்தித்தன.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலலேயே உடல் நசுங்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து எதிரொலியால், சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், போக்குவரத்தை சீரமைக்கும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். மீட்பு பணிகள் குறித்தும் ரோகிணி ஆலோணை நடத்தி வருகிறார். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.