கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு

Dec 23, 2017, 16:48 PM IST

ராஞ்சி: கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட லாலு பிரசாத் யாதவ் குற்றவாளியாக அறிவித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் ஆட்சியின்போது கால்நடை தீவனம் வாங்கியதில் ஊழல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த ஊழல் லாலு பிரசாத் யாதவின் ஆட்சியிலும் தொடர்ந்தது. அவர் தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக மீண்டும் முதலமைச்சரான பின்பு கால் நடை தீவன ஊழலை அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கிளப்பப்பட்டது.
லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, பாட்னா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்பின்னர், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் காரணமாக, 1997ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் பதவி விலகி தனது மனைவி ராப்ரி தேவியை முதலமைச்சர் ஆக்கினார். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்களும், லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1991ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை நடந்த ஊழல்களும் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டன.

இதன் பிறகு, இந்த வழக்கு விசாரணை ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைக்காக லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி சென்று நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார்.

இந்த ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் அமைச்சர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் உள்பட மொத்தம் 34 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில், விசாரணை காலத்தில் 11 பேர் இறந்துவிட்டதால் மீதம் உள்ளவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.

கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி ஒரு வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு சிபிஐ நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

லாலு பிரசாத் உடனடியாக நீதிமன்றத்திலேயே கைது செய்யப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், அவர் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சிறையில் இரண்டரை மாதங்கள் சிறையில் இருந்த யாதவ் பின்னர், ஜாமீனில் வெளிவந்தார்.

லாலு பிரசாத் யாதவ் மீதான அரசு கருவூல பணம் ரூ.30 கோடி ஊழல் வழக்கு விசாரணை ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி சிவபால் சிங் முன்னிலையில் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும் எனவும், அப்போது குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி, நீதிமன்ற வளாகத்தின் அருகே ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் குவிரந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நீதிமன்றம் மீண்டும் கூடியதை அடுத்து, பிற்பகல் 3.30 மணியளவில் சிபிஐ சிறப்பு நீதிபதி ஷிவ்பால் சிங் தீர்ப்பு வாசிக்க தொடங்கினார். அப்போது, கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் உள்பட 15 பேரை குற்றவாளிகள் என அறிவித்தார். மேலும், 7 பேரை இவ்வழக்கில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் குறித்த வரும் ஜனவரி மாதம் 3ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

You'r reading கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை