தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை கொன்று குவிக்கும் மர்மநபர்கள்

பத்திரிக்கையாளர்கள் மீதான தொடர் தாக்குதல் சம்பவங்கள்

by Vijayarevathy N, Sep 23, 2018, 11:26 AM IST

பத்திரிக்கையாளர்கள் மீதான தொடர் தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

பெங்களூருவில் பத்திரிகை ஆசிரியரும், இலக்கிவாதியுமான கௌரி லங்கேஷ் கடந்த வருடம்  செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.  "ரைசிங் காஷ்மீர்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரியை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். அதன் வரிசையில் அமெரிக்காவில் ‘கேப்பிட்டல் கெசட்’   செய்தி நிறுவனத்தில் 5 செய்தியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சமீபத்தில் மெக்ஸிகோவில் ரூபன் பாட் என்ற பத்திரிக்கையாளர் சுட்டு கொல்லப்பட்டார்.

இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக மெக்ஸிகோவில் யாஜலான் நகரில் மரியோ கோமஸ் என்ற பத்திரிகையாளர் நேற்று தனது வீட்டிலிருந்து வெளியே வந்தபோது அங்கு வந்த சில மர்ம நபர்கள், மரியோவை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

More Crime News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை