பஞ்சாபில், நகைக்கடை ஒன்றில் போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து சுமார் 8 சவரன் தங்கம் வாங்கி சென்ற பலே ஜோடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஷியாம் சுந்தர் வர்மா என்பவர் நகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடைக்கு சீபத்தில் தம்பதியினர் நகைகள் வாங்க வந்துள்ளனர்.
அங்கு, தம்பதியினர் அவர்களுக்கு பிடித்த சுமார் 2 லட்சம் ரூபாய்க்கு 59 கிராம் எடையுள்ள தங்க நகைளை வாங்கினர். அதற்கான பணத்தை ஷியாம் சுந்தர் வர்மாவிடம் அவர்கள் கொடுத்துவிட்டு நகைகளை கையில் வாங்கிக் கொண்டு அங்கிருந்து அவசரமாக இருவரும் கிளம்பினர்.
ஷியாம் சுந்தர் பணம் சரியாக உள்ளதா என்று எண்ணி பார்த்தபோது தான், ரூபாய் நோட்டுகள் அனைத்து போலி என்பது தெரியவந்தது. தனக்கு வழங்கிய ரூபாய் நோட்டுகள் அனைத்தும் குழந்தைகள் விளையாடும் போலி நோட்டுகள் என்பது தெரியவந்ததை அடுத்து ஷியாம் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், ஷியாம் இதுகுறித்து உடனடியாக போலீஸிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிசிவிடி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதில் கிடைத்த துப்புகளைக் கொண்டு தலைமறைவான தம்பதியினரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து ரூ.2 லட்சத்திற்கு தங்க நகைகளை வாங்கி தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
You'r reading போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து 8 சவரன் தங்கம் வாங்கி தப்பிய பலே ஜோடி Originally posted on The Subeditor Tamil