வறுமையை ஒழிக்க...ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் –ராகுலின் தேர்தல் வாக்குறுதி

congress president rahul gandhi planed to give yearly 72k for below poverty line people

by Suganya P, Mar 25, 2019, 05:10 AM IST

நாட்டில் வறுமையை ஒழிக்க, ஏழ்மை நிலையில் இருக்கும்  20 சதவீதம் ஏழைக் குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை 7 கட்டங்களாக நடக்க உள்ளது. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி  ஆகியவை  தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர்.  

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பின், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘நாட்டில் உள்ள 20 சதவீதம் ஏழைக் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க முடிவு செய்துள்ளோம். அதனால், 5 கோடி ஏழைக் குடும்பத்தாருக்கும் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் 25 கோடி மக்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள்’ எனத் தெரிவித்தார். 

You'r reading வறுமையை ஒழிக்க...ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் –ராகுலின் தேர்தல் வாக்குறுதி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை