ரஃபேல் ஒப்பந்தம் ஊழல் உண்மையே -புதிய ஆதாரங்கள் வெளியீடு

new data release regard rafale agreement deal

by Suganya P, Apr 9, 2019, 05:17 AM IST

ரஃபேல் ஒப்பந்தம் ஊழல் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றது. ரஃபேல் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழலை மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு நிகழ்த்தியுள்ளதாகக் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது காங்கிரஸ். இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதழ் ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் உழல் நடனத்திற்கான புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில், ‘டசால்ட் மற்றும் எம்பிடிஏ (Dassault and MBDA) என்ற பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ஆப்செட் எனப்படும் உள்ளூர் ஒப்பந்ததார நியமனத்திற்காக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ரஃபேல் கொள்முதல் ஒப்பந்தத்திற்காகப் பாதுகாப்பு துறைக்கான தடவாள கொள்முதல் விதிமுறைகளில் 2 முக்கிய அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, வரம்பு மீறி செல்வாக்கைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கு விதிக்கப்படும் அபராத முறை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை கையக படுத்தப்படுதல் கவுன்சில் ஒரு முழுமை அடையாத கோரிக்கையைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்துள்ளது  எனக் குற்றப்பட்டுள்ளது. இந்தியக் கொள்முதல் குழுவின் முயற்சியை, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நீர்த்துப்போகச் செய்தார் என்ற தகவல் வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading ரஃபேல் ஒப்பந்தம் ஊழல் உண்மையே -புதிய ஆதாரங்கள் வெளியீடு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை