பிரதமராக 2வது முறையாக மோடி பதவியேற்ற விழாவில், அத்வானி, சுஷ்மா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 303 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு சீட் தரப்படவில்லை. தனக்கு சீட் தருவார்களோ என்ற சந்தேகத்தில் இருந்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் தாங்களாகவே தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தனர்.
இந்நிலையில், சுஷ்மா சுவராஜூக்கு மீண்டும் அமைச்சர் பதவி தரப்படும் என்றும் அவர் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார் என்றும் செய்திகள் பரவியது. ஆனால், பதவியேற்பு விழாவில் சுஷ்மாவும் பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்தார். அதனால், அமைச்சர் ஆகவில்லை என்பது தெரிந்தது.
தேர்தலில் போட்டியிடாத பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன் ஆகியோரும் விழாவில் பங்கறே்றனர்.