மனைவி செய்த கொடூரம் !!கணவனுக்கு பழச்சாற்றில் விஷம் வைத்து கொலை .

wife murdered husband by mixing a poison in juice

by Logeswari, Oct 7, 2020, 21:14 PM IST

நண்பர்களுடன் பழகியதை கண்டித்ததால் மனைவி ஆத்திரம் அடைந்து கணவன் குடிக்கும் குளிர்பானத்தில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார்.


புதுச்சேரி,முதலியார்பேட்டையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கால்வாயில் கடந்த 6 ஆம் தேதி,சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு சாக்குமூட்டை கைப்பற்றப்பட்டது. அங்கிருந்த போலீசாளர்கள் திரண்டு சாக்குமூட்டையை திறந்தபோது சுமார் 35 வயதான ஒரு இளைஞர் பிணமாக கிடந்துள்ளார் . விசாரித்த போது அவர் முதலியார் பேட்டை லாரி டிரைவர் என்றும் அவரது பெயர் கமலக்கண்ணன் என்றும் தெரியவந்தது. அவரது மனைவியின் பெயர் ஸ்டெல்லா. போலீசார் அவர் மனைவியின் மீது சந்தேகம் பட்டு விசாரித்தனர்.
ஸ்டெல்லா கூறியதாவது:-
போலீஸ் ஸ்டெல்லாவிடம் விசாரித்தபோது நான் தான் என் கணவரை கொன்றேன் என்று ஒப்பு கொண்டு வாக்கு மூலம் கொடுத்துள்ளார். நான் நிறைய ஆண் நண்பர்களோடு பழகுவேன் அதை அவர் சந்தேகம் பட்டு என்னுடன் அதிக சண்டை போடுவார் இதனால் எங்களுக்குள் நிறைய வாக்குவாதம் நடக்கும் என்றும் தெரிவித்தார். இதனால் ஆத்திர பட்டு அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.என்னோட திட்டத்தை என் சகோதரனிடம் கூறினேன் அவரின் உதவியால் என் கணவருக்கு விஷம் கலந்த பழச்சாற்றை அருந்த கொடுத்தேன்.அவர் அதனை அருந்திவிட்டு மயங்கி விழுந்தார். இந்நிலையில் நானும் என் சகோதரர் இருவரும் சேர்ந்து என் கணவனின் உடலை பெரியார் நகர் வீட்டிற்கு அழைத்து வந்தோம்.அப்பொழுது அவரின் வாயில் நுரை தள்ளி மயங்கி இருந்தார் இப்படியே விட்டால் உயிர் பிழைத்துவிடுவார் என்பதால் எங்களின் ஏரியா ரவுடியான தமிழ்மணி மற்றும் என் சகோதரனின் நண்பரான ரெஜினாவையும் அழைத்தோம்.
அவர்கள் என் கணவரின் வாயில் துணியை வைத்து அடைத்து விட்டு கழுத்தில் கால்வைத்து அவரை கொலை செய்தனர்.பிறகு பிணத்தை சாக்குப்பையில் வைத்து மூட்டைகட்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அருகில் உள்ள கால்வாயில் வீசினோம் என்று ஸ்டெல்லா கூறியுள்ளனர்.


போலீசார் ஸ்டெல்லா மேல் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் ஸ்டெல்லாவின் கூட்டாளியான ரெஜினா மற்றும் தமிழ்மணியையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.

You'r reading மனைவி செய்த கொடூரம் !!கணவனுக்கு பழச்சாற்றில் விஷம் வைத்து கொலை . Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை