திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் செல்லும் மகா துவாரம் அருகே பக்தர்கள் செல்லும் வரிசை அருகே இன்று காலை சாரை பாம்பு ஒன்று வந்தது. இதைக்கண்ட பக்தர்கள் சிலர் தேவஸ்தான ஊழியர்களுக்குத் தகவல் கொடுத்தனர். தேவஸ்தான அதிகாரிகள் அங்கு வந்து பாம்பு வேறு எங்கும் செல்ல முடியாத வகையில் பெரிய பக்கெட் கொண்டு அதனை மூடி வைத்தனர். தேவஸ்தான பாம்பு பிடிக்கும் ஊழியரான பாஸ்கர் நாயுடு அங்கு வரவழைக்கப்பட்டார். பின்னர் சாரைப் பாம்பைப் பத்திரமாகப் பிடிக்கப்பட்டு சேஷாசலம் வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. பாம்பு வந்ததால் கோயில் அருகே இருந்த பக்தர்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி கோவிலில் பக்தர்களை பதறவைத்த பாம்பு
Advertisement