சிறுமியை கர்ப்பமாக்கிய டிக்டாக் பிரபலம் பார்க்கவ் கைது

Advertisement

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த, ஆந்திராவில் டிக்டாக்கில் பிரபலமாக வலம் வந்த பார்க்கவ் என்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கொத்தவலச கிராமத்தை சேர்ந்தவர் பார்க்கவ். Fun Bucket Bargav என்ற பெயரில் youtube சேனல் நடத்தி வரும் இவர், சொந்த மாக கண்டட்களை யோசித்து டிக்டாக்கில் ஏராளமான வீடியோக்களை பதிவு செய்து புகழ் பெற்றவர். இவருடைய வீடியோக்களில் பெரும்பாலும், 20 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள் இணையாக இடம்பெருவது வழக்கம்.

டிக்டாக்கில் புகழ் பெற்ற பார்க்கவுடன் வீடியோவில் நடிக்க இளம் வயது பெண்கள் பலரும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்துள்ளனர். இந்த ஆர்வத்தால் பார்கவிற்கு அறிமுகமானார் விசாகப்பட்டினத்தை அடுத்த சிங்ககிரி பகுதியை சேர்ந்த14 வயது சிறுமி. இருவரும் அருகருகே உள்ள பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் ஒன்றாக நடித்த பல்வேறு டிக் டாக் வீடியோக்களை பதிவு செய்து வந்தனர்.

நெருக்கமாக பழகினாலும் அந்த சிறுமி பார்கவை அண்ணன் என்றே அழைந்து வந்துள்ளார். ஆதேபோல பார்கவும் அந்த சிறுமியை தங்கை என்றே அழைந்து வந்ததால் சிறுமியின் பெற்றோர் இவர்களின் பழக்கத்தை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் சிறுமிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போக, பெற்றோர் அவரை மருத்துவமனை அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ந்துபோன பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தபோது, பார்கவ் தான் தனது கர்பத்துக்கு காரணம் என்றும் பார்கவ் தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியே கூறினால் தன்னை கொலை செய்து விடுவதாக பார்கவ் மிரட்டியதால் சிறுமி கதறியுள்ளார்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் பெண்டுர்த்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பார்கவ்வை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement
மேலும் செய்திகள்
diktok-celebrity-barkaw-arrested-for-raping-girl
சிறுமியை கர்ப்பமாக்கிய டிக்டாக் பிரபலம் பார்க்கவ் கைது
ttds-assertion-on-anjaneya-birth-place-on
ஆஞ்சநேயர் எங்கு பிறந்தார் என்று தெரியுமா?
andhra-mp-ram-mohan-seeks-nine-days-paternity-leave-from-attending-lok-sabha
மனைவிக்கு பிரசவம்.. நாடாளுமன்றத்தில் 9 நாள் லீவு கேட்ட எம்.பி.
like-the-vanilla-kabaddi-kulu-movie-scene-kabaddi-player-dies-while-playing
நிழல் நிஜமானது.. வெண்ணிலா கபடி குழு படகாட்சி போல விளையாடும் போதே கபடி வீரர் பலி
fans-surround-keerthi-suresh-at-tirupati-temple
திருப்பதி கோவிலில் கீர்த்தி சுரேஷை சுற்றி வளைத்த ரசிகர்கள்
daughter-high-officer-inspector-father-who-saluted-ips-daughter
மகளானாலும் உயர் அதிகாரி: ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர் தந்தை
tirupati-temple-is-going-to-shine-in-gold
தக.. தக..தங்கத்தில் ஜொலிக்க போகுது திருப்பதி கோவில்
tirupati-a-female-isro-officer-was-killed-in-a-lift-accident
திருப்பதி: லிஃப்ட் விபத்தில் இஸ்ரோ பெண் அதிகாரி உயிரிழப்பு
darshan-tickets-for-january-at-tirupati-temple-online-registration-starts-today
திருப்பதி கோயிலில் ஜனவரி மாத தரிசன டிக்கெட்டுகள் : இணையதள பதிவு இன்றுமுதல் துவக்கம்
did-anjaneyar-appear-in-tirupati-ready-to-conduct-the-research
ஆஞ்சநேயர் அவதரித்தது திருப்பதியிலா ? ஆய்வு நடத்த ஆயத்தம்
/body>