முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் காலமானார் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் தனது ட்விட்டரில் தவறாக பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சசிதரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் மக்களவை பேச்சாளர் சுமித்ரா மகாஜன் காலமானதை அறிந்து வருத்தப்படுகிறேன். மாஸ்கோவில் உள்ள பிரிக்ஸ் நிறுவனத்திற்கு ஒரு பாராளுமன்ற தூதுக்குழுவை வழிநடத்த ஒரு நாடாளுமன்ற தூதுக்குழுவை வழிநடத்துமாறு அவரும் மறைந்த சுஷ்மா ஸ்வராஜும் என்னிடம் கேட்டபோது அவளுடன் பல நேர்மறையான தொடர்புகள் எனக்கு நினைவிருக்கிறது. எனது பிரார்த்தனையில் அவரது குடும்பத்தினரையும் சேர்த்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி” என ட்விட் செய்திருந்தார்.
இதையடுத்து சுமித்ரா மகாஜன் நெருங்கியவர்கள், சசிதரூர்-க்கு தொடர்பு கொண்டு, ஏன் வதந்தியை கிளப்புகிறீர்கள் என கடுமையாக பேசியுள்ளனர். இதையடுத்த அவர் அந்த ட்விட்டை அழித்துவிட்டார்.
இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மரணமடைந்துவிட்டதாக வெளியாகும் தகவல் புரளி என்று பா.ஜ.க. மூத்த தலைவர் கைலாஷ் விஜய் வர்க்கியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவரின் ட்விட்டில், “மக்களவையின் முன்னாள் சபாநாயகர் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுமித்ரா மகாஜன் நலமுடனேயே உள்ளார். அவரை பற்றிய மரண செய்திகள் வெறும் வதந்தியே” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி சசிதரூர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தன்னோட பதிவை அழித்து விட்டதாகவும், சுமித்ரா மகாஜன் நீண்ட நாள் வாழ வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.