ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!

மகராஸ்டிர மாநிலம் அகமத் நகர் பகுதியைச் சேர்ந்த பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கேட்கர் புனே மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் துணை ஆட்சியராக இருந்தார். இவர், பல்வேறு சலுகைகள் கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நெருக்கடி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டையடுத்து, அவர் புனேயில் இருந்து வாசிம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.

பூஜா தொடர்ந்து, இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால்ஐ.ஏ.எஸ் தேர்வின் போது அவர் கொடுத்திருந்த பார்வைக்குறைபாடுள்ளவர் என்ற மாற்றுத்திறனாளி சான்றிதழ் மீது சந்தேகம் எழுந்தது. இது தவிர அவர் தனது குடும்ப வருமானத்தை குறைத்துக்காட்டி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சான்றிதழ் வாங்கி கொடுத்து அதிலும் இட ஒதுக்கீடு பெற்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவரின் தந்தை திலிப் என்பவர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி . தற்போது, அரசியலில் ஈடுபட்டு வருகிறார். திலிப் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். அவர் தனது வேட்பு மனுவில் தனக்கு 40 கோடிக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பூஜா உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் 23 ஆம் தேதியில் ஆஜராகும் படி கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால், அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், தன்னை துன்புறுத்தியதாக புனே மாவட்ட ஆட்சித்தலைவர் மீது பூஜா கொடுத்த புகார் முது வாக்குமூலம் வாங்க பூஜாவை போலீஸார் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், அவரது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாக விட்டார். இதனால், பூஜாவின் ஐ.ஏ.எஸ் தேர்வை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு யு.பி.எஸ்.சி போர்டு பூஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பூஜாவின் தில்லாலங்கடி சேட்டைகள் இத்துடன் முடிந்து விடவில்லை. யு.பி.எஸ்.சி தேர்வின் போது தனது பெற்றோர் விவாகரத்து செய்துவிட்டனர் என்று கூறி அதன் மூலம் கிடைக்கும் சலுகையையும் பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் உண்மையில் பூஜாவின் பெற்றோர் விவாகரத்து செய்யவில்லை என்றும் சேர்ந்தே வாழ்ந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தந்தை திலிப் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதால் எந்த வகையில் இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது. அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி இப்படியெல்லாம் தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். பூஜாவின் தாயார் விவசாயி ஒருவரை துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் சிறையில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாயை போல பிள்ளை என்று சமூகவலைத்தளத்தில் நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

••பூஜாவின் ஐ.ஏ.எஸ் தேர்வு ரத்து செய்யப்படுமா?

செல்போன் சுவிட்ச் ஆப்... தலைமறைவு வாழ்க்கை ))

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி

READ MORE ABOUT :