ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி

by Ari, May 5, 2021, 12:17 PM IST

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கொரோனாவால் இறந்த கணவரின் உடலை, ஒரு பெண் ஆட்டோ ரிக்ஷாவில் கொண்டு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.

உத்தரபிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏராளமான நோயாளிகள் உயிரை விட்டு வருகின்றனர். இந் நிலையில் உத்தரபிரதேசத்தின் ஃபிரோசாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், கொரோனாவால் இறந்த கணவரின் உடலை ஆட்டோ ரிக்ஷாவில் கொண்டு செல்லும் காட்சிகள் இதயத்தை கனக்க வைத்துள்ளது. கணவரின் உடலை கொண்டு செல்வவதற்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதிக அளவு பணம் கேட்டதால், அதனை கொடுக்க பணம் இல்லாததால், அந்த பெண் கணவரின் உடலை ஆட்டோவில் கொண்டு சென்றது தெரியவந்தது.

முன்னதாக கொரோனா வீரியத்தால் மிகவும் கவலைக்கிடமான தந்தைக்கு மருத்துவமனைகள் மன்றும் கொரோனா சிகிச்சை மையங்களிலோ சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் இல்லாததால், தந்தை இறந்து விட்டதாக அவரது மகன் குற்றம்சாட்டினார்.

ஆம்புலன்ஸ் பற்றாக்குறை மற்றும் அதற்கு அதிக பணம் கேட்பதாலும், பலர் தங்களது உறவினர்களின் சடலங்களை சைக்கிள்களிலும், இருசக்கர வாகனங்களிலும், தோளிலும் சுமந்து செல்லும் அவலம் நிலவுகிறது.

உத்தரபிரதேசதத்தில் இவ்வாறு பல்வேறு அதிர்ச்சி நடக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவகிறது.

பசுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கு குளிர்காலத்தில் சொட்டர், மருத்துவவசதி உள்ளிட்டவை ஏற்படுத்திக்கொடுக்கும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி பொதுமக்கள் மீது அக்கறை காட்டுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

You'r reading ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை