புதுச்சேரியில் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவுமான மல்லாடி கிருஷ்ணாராவ் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். யூனியன் பிரதேசமான புதுச்சேரி நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கியது. இதில் ஏனாம் என்ற பிராந்தியம் ஆந்திர மாநிலத்துக்கு அருகில் அமைந்துள்ளது . இது ஒரு சட்டமன்றத் தொகுதியில் கூட. இங்கு கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து எம்எல்ஏவாக இருப்பவர் மல்லாடி கிருஷ்ணாராவ். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சராகவும் இருந்தார்.
சில தினங்களுக்கு முன்பு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கிருஷ்ணராவ் இனி தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தமது குடும்பத்தினரும் இனி அரசியலில் ஈடுபட மாட்டார்கள் என்றும் அறிவித்திருந்தார். ஆந்திர மாநில ஆட்சியாளர்களுடன் நெருக்கமாக உள்ள இவருக்கு திருப்பதி எழுமலையான் கோவில் தேவஸ்தான இயக்குநா் பதவி அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுகுறித்து தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் கிருஷ்ணராவ் தெரிவித்திருந்தார்.
முதலமைச்சர் நாராயணசாமியை போலவே மல்லாடி கிருஷ்ணாராவுக்கும், புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடிக்கும் மோதல் இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது அமைச்சா் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். எனினும், தமக்குகிருஷ்ணராவ் தரப்பிலிருந்து ராஜினாமா கடிதம் வரவில்லை என்று தெரிவித்திருக்கிறார். புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா
* சட்டப்பேரவை சபாநாயகருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார், மல்லாடி கிருஷ்ணா ராவ்
* சுகாதார துறை அமைச்சராகவும் மல்லாடி கிருஷ்ணராவ் இருந்து வருகிறார்