ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தைச் சேர்ந்த அருண் குமார் என்பவர், கடந்த 11 வருடத்திற்கு முன் கீதாஞ்சலி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனைவிக்கு பாலியல் ரீதியாக கொடுமைபடுத்தி வந்த அருணுக்கு, பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. சிலரை முதல் மனைவிக்கு தெரியாமல் கல்யாணமும் செய்துள்ளார்.
பல பெண்களை திருமணம் செய்து, தனது தாகம் தீர்ந்ததும், புரோக்கர்கள் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ளார்.
ஒருகட்டத்தில் கீதாஞ்சலிக்கு, அருண் குமாரின் லீலைகள் தெரியவர, திஷா பகுதி காவல்நிலையத்திற்கு சென்று புகார்அளித்துள்ளார். ஆனால் போலீசார் அருணுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆந்திர மகளிர் ஆணையத்தை நாடியுள்ளார் கீதாஞ்சலி.
மகளிர் ஆணையத்தின் அழுத்தத்தால் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். அப்போது, அருண்குமார், இதுவரை 9 கல்யாணங்கள் செய்துள்ளார் என்பதும், அவர்களில் சிலரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரியவந்துள்ளது.
லட்சுமி என்ற பெண் மீது ஆசைப்பட்ட அரண், அவரின் கணவரை கொன்றுவிட்டு, லட்சுமி என்பவரை தன்னுடன் வசிக்குமாறும், பாலியல் தொழிலில் ஈடுபடுமாறும் தொந்தரவு செய்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.
இதையடுத்து, ஆந்திர போலீசார் அருண் குமார் மீது கொலை, கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
9 பெண்களை ஏமாற்றி, கல்யாணம் செய்து, பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து பணம் சம்பாதித்த அருண்குமாருக்கு, அரசியல் பிரமுகர்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.