மக்கள் அழுகிறார்கள் பாஜக தலைவர்கள் பிரசாரங்களில் சிரிக்கிறார்கள் - பிரியங்கா விமர்சனம்!

Advertisement

இன்றும் அவர்கள் (பாஜக தலைவர்கள்) பிரசாரத்தில் பிசியாக இருக்கிறார்கள். அவர்கள் மேடைகளில் இருந்து (பிரசார பொதுக்கூட்டங்களில்) சிரிக்கிறார்கள். மக்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தலைவிரித்தாடுகிறது. மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆக்ஸிஜன் பற்றாக்குறை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ``ஆக்சிஜன் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிறகு ஏன் இங்கு பற்றாக்குறை இருக்கிறது? முதல் மற்றும் 2ம் அலை கொரோனாவுக்கு இடையே 8-9 மாதங்கள் இருந்தன, உங்களின் (மத்திய அரசு) சொந்த ஆய்வும் 2வது அலை உடனடியாக பரவும் என்று சுட்டிக்காட்டியது, ஆனால் நீங்கள் அதை புறக்கணித்தீர்கள்.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அரசு 6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த நேரத்தில் 3-4 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்தியர்களுக்கு ஏன் முன்னுரிமை அளிக்கவில்லை? மோசமான திட்டமிடல் காரணமாக தடுப்பூசி பற்றாக்குறை, திட்டமிடல் இல்லாததால் ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, சரியான வியூகம் இல்லாததால் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது.

உங்களுக்கு நேரம் இருந்தது. இன்று, இந்தியாவில் 2000 லாரிகள் மூலமாக மட்டுமே ஆக்சிஜனைக் கொண்டு செல்ல முடியும். தேவைப்படும் இடங்களுக்கு ஆக்சிஜன் சென்று அடையவில்லை. கடந்த 6 மாதங்களில் 1.1 மில்லியன் ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. அதனால் இன்று நாம் பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம். இது அரசாங்கத்தின் தோல்வி ஆகும்.
இன்றும் அவர்கள் (பாஜக தலைவர்கள்) பிரசாரத்தில் பிசியாக இருக்கிறார்கள். அவர்கள் மேடைகளில் இருந்து (பிரசார பொதுக்கூட்டங்களில்) சிரிக்கிறார்கள். மக்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள், உதவி வேண்டி கதறுகிறார்கள், ஆக்சிஜன், படுக்கைகள், மருந்துகள் தேவை என கேட்கிறார்கள். ஆனால், நீங்கள் பெரிய பொதுக்கூட்டங்களுக்கு செல்கிறீர்கள், சிரிக்கிறீர்கள்! உங்களால் மட்டும் எப்படி முடிகிறது?” என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!

READ MORE ABOUT :

/body>