நேற்று 25 இன்று 20 பேர் - ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் தொடரும் பலி!

by Madhavan, Apr 24, 2021, 10:50 AM IST

டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று இரவு மட்டும் 20 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்றும் உயிரிழப்பு தொடர்கிறது.

தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கங்காராம் தனியார் மருத்துவமனையில், ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, மருத்துவமனையின் இயக்குனர் கூறுகையில், கங்காராம் மருத்துவமனையில், 500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 140-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு, ஆக்சிஜன் வாயிலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த, 25 பேர் இறந்துவிட்டனர்.

இன்னும் சில மணி நேரத்துக்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளது. 60-க்கும் மேற்பட்ட நோயாளிகள், ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். விமானத்திலாவது, ஆக்சிஜன் உடனடியாக எடுத்து வரப்பட வேண்டும்” என்று நேற்று தெரிவித்திருந்தார். கங்காராம் மருத்துவமனை மட்டுமின்றி, டில்லியில் உள்ள ஏராளமான பெரிய மற்றும் சிறிய மருத்துவமனைகள், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன.

'ஆக்சிஜன் சப்ளையை அதிகரிக்க வேண்டும்' என, முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, மருத்துவமனைகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் இன்று மீண்டும் ஆக்ஸிஜன் தட்டுபாட்டால் 20 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று இரவு மட்டும் 20 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். கையிருப்பில் உள்ள ஆக்சிஜன் அரை மணி நேரத்துக்கு மட்டுமே நீடிக்கும் என்பதால் 200 பேரின் உயிர் ஆபத்தில் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுளது.

You'r reading நேற்று 25 இன்று 20 பேர் - ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் தொடரும் பலி! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை