ஆனி மாத பூஜைக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து, தேவபிரஸ்னம் தொடங்கியது.
கடந்தாண்டு சபரிமலையில் நடந்த பங்குனி உத்திர திருவிழாவில், ஆராட்டு ஊர்வலத்தின் போது, யானை மிரண்டு ஓடியது. ஒரு பூசாரி உள்பட சிலர் காயம் அடைந்தனர்.
மேலும், யானை மீது வைக்கப்பட்டிருந்த ஐயப்ப விக்ரகம் கீழே விழுந்தது. இது அபசகுணமாக கருதப்பட்டதால், தேவபிரஸ்னம் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, இன்றைய தினம், இன்று அதிகாலை 4 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய் அபிஷேகத்தை ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து உஷ பூஜை, உச்ச பூஜை, களபாபிஷேகம் போன்றவை நடந்தது. இன்று முதல் வருகிற 17ஆம் தேதி வரை தேவபிரஸ்னம் நடைபெற உள்ளது.
வருகிற 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை நடை மீண்டும் அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.