சென்னையில் பயங்கரம்:போலீஸ் ராஜவேலுவை வெட்டிய ரவுடி சுட்டுக்கொலை

Advertisement

ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருபவர் ராஜவேலு. கடந்த திங்களன்று இரவு பணியில் ஈடுபட்டு இருந்தார். நள்ளிரவு நேரத்தில் காவல்நிலையத்திற்கு ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடிசைவாழ் பகுதியில் சிலர் மது அருந்திவிட்டு சாலையில் அமர்ந்து தகராறு செய்து வருவதாக காவல் கட்டுப்பாடு அறையில் இருந்து தகவல் வந்துள்ளது.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தனியாக மோட்டார் சைக்கிள் மூலம் விரைந்தார் ராஜவேலு. அங்கு ரகளையில் ஈடுபட்டு இருந்த ரவுடிகள் அனைவரையும் களைந்து செல்லுமாறு எச்சரித்தார். இதனால், கோபமடைந்த ரவுடிகள் சிலர் சேர்ந்து தனியாக வந்த ராஜவேலுவை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் சுமார் 16 இடங்களில் வெட்டுப்பட்டு உயிருக்கு பயந்து அவ்வழியே வந்த ஒரு ஆட்டோவில் ஏறி தப்பி சென்றார் ராஜவேலு.

இதுபற்றி தகவல் அறிந்ததும் துணை கமிஷனர் சரவணன் உத்தரவின் பேரில் ராயப்பேட்டை உதவி கமிஷனர் வினோத் தலைமையில் போலீசார் விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தி ராஜவேலுவை கத்தியால் குத்திய 6 பேரையும் கைது செய்தனர்.

ரவுடி அரவிந்தன், ஜிந்தா, அஜித்குமார், வேல் முருகன், சீனு, மகேஷ் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன. முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஆனந்தன் தலைமறைவாக இருந்து வந்தார். கமிஷனர் விஸ்வநாதன் உடனடியாக ஆனந்தனை கைது செய்ய உத்தரவிட்டார்.

கூடுதல் கமிஷனர் சாரங்கன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. செவ்வாய் இரவு 8 மணியளவில் சென்னை அருகே சோழிங்கநல்லூர் பகுதியில் ஆனந்தன் உட்பட 4 பேரை கைது செய்தது போலீஸ்.

பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் அழைத்து வரும் போது, ராஜவேலுவிடம் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட வாக்கி-டாக்கி கருவியை எங்கே என போலீசார் கேட்டனர். அதற்கு ஆனந்தன் அதனை தரமணி மத்திய பாலிடெக்னிக் அருகே உள்ள ஒரு புதர் பகுதியில் மறைத்துவைத்துள்ளேன் என கூறியுள்ளார்.

அதனை அடுத்து ஆனந்தனை மட்டும் தனியே மத்திய பாலிடெக்னிக் அருகே உள்ள பகுதிக்கு அழைத்து சென்று வாக்கி-டாக்கி கருவியை மீட்டனர். வாக்கி-டாக்கி அருகே ஏற்கனவே மறைத்து வைத்து இருந்த அரிவாள் கொண்டு திடீரென ரவுடி ஆனந்தன் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.

அப்போது ரவுடி ஆனந்தனை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். அதில் மார்பில் குண்டடிபட்டு சம்பவ இடத்திலேயே ஆனந்தன் உயிரிழந்தான். இந்த சம்பவம், சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரவுடி ஆனந்தன் மீது 5 கொலை முயற்சி வழக்குகள், என மொத்தம் 13 வழக்குகள் உள்ளன. திருமணமான ஆனந்தனுக்கு ரஷீதா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
/body>