தொடங்குகிறது நாடாளுமன்றக் கூட்டத்தொடர்- அதிக பரபரப்புடன் டெல்லி

Jul 18, 2018, 11:48 AM IST

டெல்லி நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குவதால் டெல்லி இன்று கூடுதல் பரபரப்புடன் காணப்படுகிறது.

சமீபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தார். இதனால், இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சிக்கு வந்து 4 வருடத்தில் முதன்முறையாக தே.ஜ.கூ, நம்பிக்கையில்லா தீர்மான நடவடிக்கையை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து 10 ஃபேக்ட்ஸ்: இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பாஜக-வுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது. அதற்கு தனியாக 273 சீட்கள் இருக்கின்றன. இது பாதியளவை விட மிக அதிகம். ஆனால், பாஜக-வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை எதிர்கட்சிகளால் எடுக்கப்பட உள்ளது.

மேலும், சமீபமாக ராகுல் காந்தி, ‘காங்கிரஸ் முஸ்லீம்களுக்கான கட்சி’ என்று கூறியதாக பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இது குறித்து பாஜக தரப்பு பிரச்னை எழுப்பும் என்று யூகிக்கப்படுகிறது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தில் ராகுல் காந்தியின் அணுகுமுறை குறித்து சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எதிர் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading தொடங்குகிறது நாடாளுமன்றக் கூட்டத்தொடர்- அதிக பரபரப்புடன் டெல்லி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை