வறுமையிலிருந்து சுதந்திரம் தேவை - குடியரசு தலைவர் பேச்சு

மக்கள் வறுமையில் இருந்து மீள சுதந்திரம் தேவை

Aug 14, 2018, 22:00 PM IST

ஏழை எளிய மக்கள் வறுமையில் இருந்து மீள சுதந்திரம் தேவை என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது சுதந்திரதின உரையில் கூறியுள்ளார்.

Ram Nath kovind

நாட்டின் 72-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பின்னர் உரையாற்றிய அவர், “ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி புனிதநாளாகும், இந்த நாளில், நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகள், ராணுவ வீரர்களை நாம் நினைவுகூற வேண்டும்” என்றார்.

“கல்வி, பணிகளில் பெண்கள் சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை தேவை. பெண்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பெண்கள் சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும்” என குடியரசு தலைவர் பேசினார்.”

“விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்பத்தை வழங்குவதன் மூலம் உணவு பொருள் உற்பத்தியை பெருக்க முடியும். மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட உறுதி ஏற்க வேண்டும்” என்று குடியரசு தலைவர் ராம்நாத் அழைப்பு விடுத்தார்.

You'r reading வறுமையிலிருந்து சுதந்திரம் தேவை - குடியரசு தலைவர் பேச்சு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை