பெரியபாண்டியனை தவறுதலாக சுட்டது முனிசேகர் தானா ? தமிழக காவல் துறை சொல்வது என்ன ?

Advertisement

சென்னை: ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையனை பிடிக்க சென்றபோது உடன்வந்த ஆய்வாளர் முனிசேகர் தான் தவறுதலாக சுட்டதாக பரவிய தகவலுக்கு தமிழக காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை, கொளத்தூர் தங்க நகைக்கடையின் கூரையில் துளையிட்டு கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்ற மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சமீபத்தில் சுட்டுக் கொள்ளப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரிய பாண்டியனுடன் சென்ற முனிசேகர் காயத்துடன் உயிர் தப்பினார்.

கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் தனிப்படை போலீசாருடன் ராஜஸ்தானுக்கு சென்று, அங்கு கொள்ளையர்களை சுற்றி வளைத்தனர். அப்போது தான் கொள்ளையர்கள் அவரது துப்பாக்கியை பிடுங்கி பெரியபாண்டியனை சுட்டதாக கூறப்பட்டது. இதன்பிறகு, இன்ஸ்பெக்டர் முனிராஜ், கொள்ளையர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்த அவரது துப்பாக்கியை எடுத்து கொள்ளையர்கள் சுட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால், காவல் ஆய்வாளர் முனிராஜ் தான் பெரிய பாண்டினை தவறுதலாக சுட்டதாக ராஜஸ்தான் காவல் தெரிவித்தது. இதுதொடர்பாக, ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம், ஜெய்தரன் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

பெரியபாண்டியன் மறைவு குறித்து முனிசேகர் கொடுத்த புகாரின் அடுப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அதில், தனது துப்பாக்கியில் பெரிய பாண்டியனை கொள்ளையர்கள் சுட்டதாக முனிசேகர் கூறினார்.
ராஜஸ்தானில் இருந்து சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய முனிசேகரிடம் தமிழக காவல் உயரதிகாரிகள் இதுதொடர்பாக இன்று விசாரத்ததாகவும், அதில் பெரியபாண்டியனை காப்பாற்ற முயன்றபோது முனிசேகரின் கையில் இருந்த துப்பாக்கி வெடித்ததில் பெரியபாண்டியன் மரணம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இந்த தகவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக காவல் துறை அறிக்கை ஒன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில்,“ மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் பெரியபாண்டியன் அவர்களின் இறப்பு குறித்து ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தில் உள்ள ஜெய்தரன் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து எவ்வித கருத்தையும் சென்னை பெருநகர காவல் துறை தெரிவிக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிட்டிருந்தது.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
/body>