வேற்றுக்கிரக நுண்ணுயிரா?... துக்க சம்பவத்தின் அறிகுறியா?... பூமியின் விலகாத மர்மமாக இருக்கும் செம்மழை

analysis about red rain in kerala

by Sasitharan, Apr 2, 2019, 00:18 AM IST

நமது பூமி நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற ஐந்து பஞ்ச பூதங்களால் ஆனது. இவற்றில் ஒன்று இல்லாவிடினும் உலகில் உள்ள எந்த உயிரினமும் வாழ முடியாது. இதில் நீர் என்பது மிக இன்றியமையாதது. மழை நீரின் மூலம் தேவையான நீரை நாம் பெறுகிறோம். இப்படியான மழை நீர் ஒரு சில சமயங்களில் சிவப்பு நிறமாக பொலிவதை கண்டதுண்டா?ஆம் மழைநீர் சிவப்பு நிறமாக பெய்திருக்கிறது.

சிவப்பு மழை அல்லது குருதி மழை எனப்படுவது ஓர் அரிதான வாய்ப்பு. ஒரு சில சமயங்களில் மழையானது சிவப்பு அல்லது கபில நிறத்தில் பெய்யும். இப்படியான நிகழ்வு பல வகைப்பட்ட இலக்கியங்களில் ஒரு துக்க சம்பவத்தின் அறிகுறியாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ கருதப்படுகிறது. எனினும் இது சாதாரண இயற்கை நிகழ்வாகும். இந்தியாவின் கேரள மாநிலத்தில் 2001 ஆம் ஆண்டு இவ்வாறான செம்மழை பொழிந்தது. இம்மழை செங்கல் நிறத்தில் காணப்பட்டது. இலங்கையில் 2012 நவம்பர் மாதம் மொனராகலை மாவட்டத்தில் இவ்வாறான செம்மழை பொழிந்தது.

இந்நிகழ்வு பல்வேறு ஆய்வு நிறுவனங்களால் ஆராயப்பட்டது. ஆய்வின் முடிவில், மழையுடன் கலந்த தூசால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கடுமையான காற்றுடன் கலந்திருக்கும் தூசானது நீராவி முகில்களாக ஒடுங்கி மழையாகப் பொழியும் போது சிவப்பு மழையாகப் பொழிவதாகக் கருதப்படுகின்றது. மழையில் கலந்திருக்கும் ஒரு வகை சிவப்பு படிவத்தால் செம்மழை பொழிவதாக இலங்கையில் பொழிந்த சிவப்பு மழைக்கான விளக்கங்கள் கூறுகின்றன. சில அறிவியலாளர்களின் கருத்துப்படி இது வேற்றுக்கிரகத்திலிருந்து வந்த நுண்ணுயிர்களாகயிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

You'r reading வேற்றுக்கிரக நுண்ணுயிரா?... துக்க சம்பவத்தின் அறிகுறியா?... பூமியின் விலகாத மர்மமாக இருக்கும் செம்மழை Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை