தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளியில் ₹ 1.30 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணை கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த 3 பேரை கலால் துறையினர் கைது செய்தனர். இவற்றை ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்திக் கொண்டு வர முயன்ற போது இந்தக் கும்பல் கைது செய்யப்பட்டது.
கேரள, கர்நாடகா எல்லைகளில் கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ள நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாகக் கேரளாவில் தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
கேரளாவில் ஆர்எஸ்எஸ் மற்றும் எஸ்டிபிஐ தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒரு ஆர்எஸ்எஸ் தொண்டர் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆர்எஸ்எஸ் மற்றும் எஸ்டிபிஐ இயக்கத்தைச் சேர்ந்த தலா 3 பேர் படுகாயமடைந்தனர்.
கேரள மாநிலம் கொல்லத்தில் இன்று அதிகாலை ராகுல் காந்தி மீனவர்களுடன் படகில் ஒன்றாக கடலுக்குச் சென்று வலை வீசி மீன் பிடித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது திடீரென தன்னுடைய டி சர்ட்டை கழட்டி அவர் கடலில் குதித்ததைப் பார்த்து மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கேரளாவிலிருந்து செல்பவர்களுக்கு மகாராஷ்டிரா, டெல்லி உள்பட 5 மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் ஆனவர்கள் மட்டுமே இந்த மாநிலங்களில் கேரளாவை சேர்ந்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
கேரளாவில் சுற்றுப் பயணம் செய்துவரும் ராகுல் காந்தி, இன்று அதிகாலை மீனவர்களுடன் ஒன்றாகப் படகில் கடலுக்கு சென்று வலைவீசி மீன் பிடித்தார். பின்னர் அவர் மீனவர்கள் சமைத்துக் கொடுத்த மீனை ருசித்துச் சாப்பிட்டார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்னோடியாகக் கேரளாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் கேரளாவில் தொடர்பின் மூலம் ஒருவருக்குப் பரவியது. தற்போது பரவி வரும் வைரசை விட இந்த உருமாறிய வைரஸ் 70 சதவீதம் வேகத்தில் பரவும் என்பதால் நோய் பரவலைக் கட்டுப்படுத்த கேரள சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இரு மாநில எல்லைப்பகுதிகளில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தகவல் பரிமாற்றங்கள் குறித்து தமிழக கேரள அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.