கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
இதில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி 99 இடங்களை வென்றுள்ளது. இதன்மூலம் தொடர்ச்சியாக வரலாற்று ரீதியான இரண்டாவது வெற்றியை வெற்றிபெற்று அசத்தியுள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி நடக்கப்போவது கேரளாவில் இப்போது தான் முதல்முறை. இதனை சாத்தியமாக்கியவர் கேரள முதல்வர் பினராயி விஜயன். இந்த முறை கேரளாவில் பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸ் முதல்முறையாக கேரள சட்டமன்றத்துக்குள் நுழைய இருக்கிறார். இவர் பினராயி மகள் வீணாவை திருமணம் செய்துள்ளார்.
இவர் DYFI தேசிய தலைவரும் கூட. இதற்கிடையே, முதல்முறை எம்எல்ஏ ஆகி இருக்கும் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆளும் எல்டிஎப் அரசில் போன முறை அமைச்சர்களாக இருந்த பலருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த பதவிகளை இந்த முறை இளம் தலைமுறையினருக்கு கொடுக்கப்படலாம் என்றும், அப்படி பார்க்கையில் சட்டமன்றத்துக்கு தேர்வாகி இருக்கும் இளைஞர்கள் வரிசையில் முன்னணி இருப்பவர் முகமது ரியாஸ் என்றும், இதனால் அவருக்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.