சிம்பு தம்பி மதம் மாற காரணம் இதுதான்... திருவிழா போல் மாறிய வீடு

டி.ராஜேந்திரனின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன் இந்து மதத்திலிருந்து இஸ்ஸாமிய மதத்திற்கு மாறியுள்ளார்.

சிம்பு தம்பி

சிம்பு நடிப்பில் கடந்த 2016ல் வெளியான படம் இது நம்ம ஆளு. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சிம்புவின் சகோதரர் குறளரசன். இப்படத்திற்குப் பிறகு இவருக்கு எந்த வாய்ப்பும் வரவில்லை. தற்பொழுது ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். சமீபத்தில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி டி.ராஜேந்தர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன். எந்த எதிர்ப்பும் இன்றி மகனின் விருப்பமே எனது விருப்பம் என்றும், எம்மதமும் சம்மதம் என நம்புகிறவன் நான் என்றும் அந்நேரத்தில் டி.ராஜேந்தர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறளரசன்

குறளரசனுக்கு தற்பொழுது திருமணம் நிச்சயமாகியுள்ளது. அவர் காதலித்த இஸ்லாம் பெண்ணான நபீலா என்பவரை திருமணம் செய்யவிருக்கிறார். இவருக்காகவே இஸ்லாம் மதத்தை விரும்பி ஏற்றிருக்கிறார் குறளரசன். ஆனால் பெயரை மாற்றிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நபீலாவின் பெற்றோர் பெயர் ராஃபி அஹமத் மற்றும் ரெஹ்மத் அஹ்மத். நபீலா, பி.காம் முடித்துள்ளார்.

குறளரசன் - நபீலா இருவருக்குமான திருமண வரவேற்பு ஏப்ரல் 29ஆம் தேதி சென்னை கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டரில் மாலை நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் கலந்துகொள்ள ரஜினி, விஜய்காந்த் உள்ளிட்ட பலருக்கும் டி.ஆர். அழைப்பிதழ் கொடுத்துள்ளார் என்பது கூடுதல் தகவல். சிம்பு வீடு திருவிழா கோலம் பூண்டுள்ளது. 

 

சிம்பு படத்தில் தோல்வி; விஷால் படத்துக்கு நகர்ந்த சுந்தர் சி.. என்ன சங்கதி  

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
what-are-the-benefits-of-using-some-kitchen-ingridents-in-tamil
வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருள்களை வைத்து ஃபேஷியல் செய்வது எப்படி??
what-are-the-disadvantage-for-girl-while-eating-red-meat
பெண்கள் ஏன் அதிகமாக இறைச்சி எடுத்துக்க கூடாது தெரியுமா?? வாங்க தெரிந்து கொள்ளலாம்..
relationship-these-are-the-most-googled-questions-about-sex
பாலியல் உறவு குறித்து கூகுள் இணையத்தில் தேடப்பட்ட அதிக கேள்விகள்
details-about-world-virus-impact
விலங்கியல் நோய்களால் 3.25 கோடி மக்கள் உயிரிழப்பு... என்னதான் தீர்வு?!
what-are-the-benefits-in-child-growth
குழந்தைகள் உயரமாக வளர இந்த டிப்ஸ்யை பயன்படுத்துங்கள்..
how-to-cure-belly-in-tamil
இனி தொப்பையை குறைப்பது வெரி ஈஸி!! இதை செய்தால் மட்டும் போதுமாம்..
what-are-the-benefits-of-drinking-beetroot-juice
தினமும் பீட்ருட் சாறு குடிப்பதால் உடலுக்கு எவ்வகை ஆரோக்கியம் கிடைக்கும்??
what-are-the-symptoms-of-corona-virus
இந்த அறிகுறி இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு அந்த நோய் தான்!! நூறு சதவீதம் உறுதி..