டி.ராஜேந்தரின் மகன் குறளரசன் மதம் மாறியது இதுக்குத்தானாம்.... காதலித்த இஸ்லாமிய பெண்ணை கரம் பிடிக்கிறார்

Advertisement

டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன், தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணை திருமணம் செய்கிறார். இதற்காகத்தான் குறளரசன் சமீபத்தில் தானும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன், இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சிம்பு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கினார். 2016-ல் இந்தப் படம் ரிலீஸானது. அதன்பிறகு வேறெந்த படத்துக்கும் இசையமைக்காத குறளரசன், தற்போது ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


இந்நிலையில், குறளரசனுக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணையே திருமணம் செய்யவுள்ளார் குறளரசன். அதற்காகத்தான் கடந்த பிப்ரவரி 16-ந்தேதி தம் பெற்றோர் டி.ராஜேந்தர் - உஷா முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன். ஆனாலும், குறளரசன் என்ற தன்னுடைய பெயரை மாற்றிக் கொள்ளவில்லை.

மணப்பெண்ணின் பெயர் நபீலா ஆர். அஹமத். பி.காம். முடித்துள்ள நபீலாவின் பெற்றோர் பெயர் ரஃபி அஹமத் - ரெஹ்மத் அஹ்மத் ஆவர். இவர்களுடைய திருமண வரவேற்பு, வருகிற 29-ந் தேதி சென்னை கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

இதற்காக . திருமண அழைப்பிதழை விஐபிக்களுக்கு வழங்கும் வேலையில் டி.ராஜேந்தரும் குறளரசனும் மும்முரமாகி உள்ளனர். நேற்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்தை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்த நிலையில் இன்று நடிகர் ரஜினியைச் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

குறளரசன் திருமணத்தில் அரசியல், திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் டி.ராஜேந்தரின் மூத்தo கனும் குறளரசனின் அண்ணனுமான சிம்புவுக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் அண்ணனுக்கு முந்தி தம்பிக்கு கண்ணாலம் நடக்க உள்ளது.

Actor t.rajendars younger son kuralarasan going to marry Islamic girl
Actor t.rajendar son, kuralarasan, marriage
நடிகர் டி.ராஜேந்தர் மகள், குறளரசன் திருமணம்

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>