ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!

by Logeswari, May 5, 2021, 14:50 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஷ்ணு விஷால். இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் அளவில்லாத புகழை தேடிக்கொடுத்தது ராட்சசன் திரைப்படம் தான். இத்திரைப்படத்தை இயக்குனர் ராம்குமார் இயக்கி இருந்தார். சில நாட்களுக்கு முன்பு பணம் ஏமாற்றியதாக காமெடி நடிகர் சூரி, விஷ்ணு விஷால் மீது குற்றம் சாட்டினார்.

இவை சோசியல் மீடியாவிலும் ட்ரெண்டிங் ஆனது. அதன் பிறகு கடந்த மாதத்தில் விளையாட்டு வீராங்கனையை மணந்தார். ராட்சசன் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடித்திருந்தார். இவரது படத்திலே இத்திரைப்படம் அளவு கடந்த வசூல்,விமர்சனம் போன்றவற்றை சாதனையை சந்தித்தது.

இந்நிலையில், ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இயக்குனர் ராம்குமார், தனுஷ் படத்தை இயக்கி முடித்த பின் ராட்சசன் 2-ம் பாகத்தை இயக்குவார் என விஷ்ணு விஷால் கூறியுள்ளார். மேலும் இப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You'r reading ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..! Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை