சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!

by Madhavan, May 4, 2021, 12:24 PM IST

தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்த நெட்டிசன்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் பிரியா பவானி சங்கர். அதன் பின் நடிகையாக சீரியலில் நடிக்க தொடங்கி பெரிய அளவில் பாப்புலர் ஆனார். அவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதற்கு பிறகு அவர் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது பிஸியான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடித்த தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கிறது.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்ககத்தில் "நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் @mkstalin அவர்கள் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழி நடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக் கொண்டிருக்குறோம். வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு சிலர் பிரியா பவானி ஷங்கரை விமர்சிக்கும் வகையில் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். சில வருடங்களுக்கு முன் அவர் ட்விட்டரில் போட்ட பதிவுகளை எடுத்து பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர். அதற்கு பதில் அளித்துள்ள அவர் "This cracked me up பெரிய CID.. ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? என் timeline la இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் journalista இருந்திருக்கேன். என் வேலையே அதுதான் இன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும் " என கூறி உள்ளார் அவர்.

மேலும் முதல்வரை மக்கள் தேர்ந்தெடுக்க முடியாது என கூறி இருந்ததற்கு "take a seat என்றால் seat-அ தூக்கிக்கிட்டு நில்லுன்னு அர்த்தம் இல்ல.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்னா மக்கள் உக்காந்து inky pinky போட்டு எடுத்தாங்கன்னு அர்த்தம் கிடையாது.6th std civics book விட நிறைய படிச்சிருக்கேன் sir.மத்தப்படி எது முட்டாள்தனமான வாதம்னு நான் சொல்ல எதுவும் இல்லை" என கூறி சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

You'r reading சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை