விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!

கொரோனா நோயாளி ஒருவர் படுக்கை வசதி கிடைக்காமல் அவதிப்பட்ட நிலையில், விமான ஆம்புலன்ஸ் மூலம் படுக்கை வசதியிருக்கும் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய உதவியிருக்கிறார் நடிகர் சோனு சூட். அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

நடிப்பதைத்தாண்டி, சமூக சேவை பணிகளின் மூலம் சாமானியர்களையும் சென்றடைந்தவர் நடிகர் சோனுசூட். சமூக வலைதளங்களில் உதவி என கேட்டு வருபவர்களுக்கு தன்னால் முடிந்தவரையில் உதவி வருகிறார். கொரோனா காலத்தில் அவர் செய்து வரும் பல உதவிகள், சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கின்றன.

அப்படி அவர் சமீபத்தில் செய்த உதவியும், இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. அந்த உதவி என்னவெனில், படுக்கை வசதி மற்றும் வெண்டிலேட்டர் கிடைக்காமல், மிக தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த நாக்பூரை சேர்ந்த 25 வயது கைலாஷ் அகர்வால் என்ற பெண்ணை, கொரோனா சிகிச்சைக்காக நாக்பூரிலிருந்து ஐதராபாத் தனியார் மருத்துவமனைக்கு விமான ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து வர உதவியிருக்கிறார்.

கைலாஷ் அகர்வால் முன்பு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த மருத்துவமனையில், வேறு பெரிய மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்லுமாறு மருத்துவர்களே கூறியிருக்கின்றனர். மேற்கொண்டு சிகிச்சையளிக்காமல் கைவிட்டிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, அப்பெண்ணின் குடும்பத்தினர், அப்பகுதி எம்.எல்.ஏ. மூலமாக வேறு மருத்துவமனைகளில் விசாரித்திருக்கின்றனர். அப்போதும் உதவி கிடைக்காததால், சமூக வலைதளத்தை நாடியிருக்கின்றனர். இது தொடர்பாக அவர்கள் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இதை பார்த்த சோனுசூட், உடனடியாக வெண்டிலேட்டர் வசதியுடன் இருக்கும் அவசர சிகிச்சை பிரிவுடன் இருக்கும் ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதிக்கும் முயற்சியை தொடங்கியிருக்கிறார்.இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இந்த உதவிகுறித்து பத்திரிகைகளுக்கு பேசியிருக்கும் சோனு சூட், "அந்த பெண் நோயாளி சிகிச்சை எடுத்து வந்த பகுதியில் விமான நிலையம் இல்லை. அதனால் அருகிலுள்ள வேறொரு இடத்துக்கு அவரை அழைத்து வர வேண்டியிருந்தது.

அதற்காக மருத்துவமனை தரப்பிலும், உள்ளூர் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிடமும் அனுமதி பெற்றோம். தொடர்ந்து உடனடியாக மருத்துவக் குழுவினர் விரைந்து செயல்பட்டு, அப்பெண்ணை விமான நிலையத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வந்துவிட்டனர். இப்போது அவருக்கு சிகிச்சை நடந்துக்கொண்டிருக்கிறது. விரைவில் குணமடைவார் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி