நடிகை வரலட்சுமி போடா போடி என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார். கடைசியாக தமிழில் அவர் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தில் நடித்திருந்தார். தற்போது, 38 வயதாகும் வரலட்சுமி ஆரம்பத்தில் நடிகர் விஷாலை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. இந்த சூழலில் வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபர்ல நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்தது தெரிய வந்தது.
நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பதோடு மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரின் திருமணம் தாய்லாந்தில் நாளை நடைபெறவிருக்கிறது. உறவினர்களும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் திருமணத்தில் கலந்துகொள்ள உள்ளனர். இதையொட்டி, மெஹந்தி கொண்டாட்டம் நடைபெற்றது. அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. மெஹந்தி நிகழ்ச்சியில் வரலட்சுமி மஞ்சள் நிற கவுனில் தங்கம் போல் மின்னினார். இந்த நிகழ்ச்சியின் போது, ராதிகா தனது மகள் ரயானே உடன் ரவுடி பேபி பாடலுக்கு செம நடனம் ஆடினார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. தாய்லாந்தில் திருமணத்தை முடித்துவிட்டு வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.