பணத்தின் மதிப்பும் குழந்தை வளர்ப்பும்

கல்வி, இதர கலைகள், ஆரோக்கியம் ஆகியவற்றை கவனித்து பிள்ளைகளை கருத்தாய் வளர்க்கிறோம். ஆனால், பணத்தை கையாளுவது குறித்த, பொருளாதார விஷயத்தில் திறனாய் இருப்பதற்கான பயிற்சிகளை கொடுக்க தவறி விடுகிறோம். பணத்தை கையாளுவது எப்படி என்பதை எந்தப் பள்ளியிலும் படித்துக் கொடுக்க மாட்டார்கள்.

'பணத்தை குறித்த நல்ல பழக்கவழக்கங்கள்' என்று அவற்றை குறிப்பிடலாம்.
பிள்ளைகளுக்கு பணத்தை குறித்து சொல்லிக்கொடுக்கவேண்டும்; ஆனால், அதை செய்யும் வழிமுறை தெரியவில்லை என்று கூறும் பெற்றோர் அநேகர். பலர், கற்றுத் தர விரும்புகிறோம்; ஆனால், நேரம் கிடைப்பதில்லை என்கிறார்கள். பண விஷயத்தை குறித்து பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதை எப்படி ஆரம்பிக்கவேண்டும் என்றுதெரியாததால், அதை அநேகர் அப்படியே விட்டுவிடுகிறார்கள்.

பிள்ளைகளுக்கு பணத்தை கையாள எப்படி கற்றுக்கொடுப்பது?

பொறுப்புடன் கூடிய சுதந்திரம்
பணத்தை தாங்களாகவே கையாளவேண்டும் என்ற ஆவல் குழந்தைகளுக்கு எப்போதும் உண்டு. ஒரு சிறு தொகையை அவர்கள் கையில் கொடுத்து அவர்களையே செலவு செய்யும்படி கூறினால் அதிக மகிழ்ச்சியடைவார்கள். மாதந்தோறும் சிறு தொகையை அவர்களுக்குக் கொடுத்து அதற்குள் அம்மாதத்திற்கு அவர்களுக்கான செலவுகளை செய்யும்படி கூறலாம்.

நாள்தோறும், வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் சிறுதொகையை அளித்து அதற்குள் செலவுகளை செய்ய வைத்தால், எதற்கு செலவழிக்கவேண்டும், எதற்கு செலவழிக்கக்கூடாது என்று அவர்கள் கற்றுக்கொள்வார்கள். அதற்கான சுதந்திரத்தை பெற்றோர் அளிக்கவேண்டும். அப்போது சுயமாக முடிவெடுக்கும் பொறுப்பு, சிறுசிறு தவறுகள் மூலம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு பிள்ளைகளுக்குக் கிடைக்கும். காலப்போக்கில் பணத்தை கையாளும் கலையில் அவர்கள் தேறி விடுவார்கள்.

வழிகாட்டுதல்

உங்கள் மகன் / மகள் கையில் நீங்கள் பணத்தை கொடுத்தபிறகு, அப்படியே விட்டுவிடக்கூடாது. எல்லாவற்றிலும் தலையிடாவிட்டாலும் அவன் / அவள் அதை எப்படி செலவு செய்கிறான் (ள்), எப்படி கையாளுகிறான்(ள்) என்பதை கவனம் செலுத்தவேண்டும். இந்த விதமான காரியங்களுக்கு இவ்வளவு செலவு போதும், இதுபோன்ற விஷயங்களில் செலவே செய்யக்கூடாது என்று பொதுவான வழிகாட்டுதல்களை கூறவேண்டும். அது தேவைக்கு அதிகமாக அவர்கள் செலவழித்துவிடாமல் இருக்க உதவும்.

பேனா, பென்சில் போன்ற கல்வி உபகரணங்களுக்கு இவ்வளவு, தின்பண்டங்களுக்கு இவ்வளவு என்று குறிப்பிட்ட தொகையை (பட்ஜெட்) நிர்ணயம் செய்து கொடுக்கலாம். அப்போது பிள்ளைகள் எவையெவற்றிற்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பது தெரிய வரும்.

சம்பாதிக்க வையுங்கள்

பொருளீட்டுபவர்களுக்கே அதன் மதிப்பு புரியும். பணத்தை சம்பாதிக்க வைத்தால் பிள்ளைகளுக்கு அதன் அருமை புரியும். சிறு இலக்குகளை அவர்களுக்கு நிர்ணயிக்கலாம். 'இதை நீ செய்தால் இவ்வளவு தருவேன்' என்று ஊக்குவிக்கலாம். பள்ளியில் குறிப்பிட்ட தேர்வில் இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தால், சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டால், தனியாக கடைக்குச் சென்று வந்தால் என்று அவர்களுக்குப் பொருத்தமான ஏதாவது இலக்கினை நிர்ணயிக்கலாம். கடினமாக உழைத்தால்தான் பணம் கிடைக்கும்; உழைப்பின் பலனே பணம் என்பது பிள்ளைகளுக்குப் புரியும். ஆகவே, அதை சரியானவிதத்தில் மட்டுமே செலவு செய்யவேண்டும் என்றும் கற்றுக்கொள்வார்கள்.

அருமையை புரிய வையுங்கள்

ஏதாவது பொருளை வாங்குவதாக இருந்தால் அதை எப்படி வாங்கவேண்டும் என்று பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம். உதாரணமாக, எந்தப் பொருள் எந்தக் கடையில் தரமானதாக, சரியான விலையில் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ள வழிநடத்தலாம். பொருள்களை பேரம்பேசி வாங்குவதை கற்றுக்கொடுக்கவேண்டும். அப்போது தங்களிடம் இருக்கும் தொகையை உரியவிதத்தில் செலவழிக்க அவர்கள் கற்றுக்கொள்வார்கள். பணத்தை கையாளுவதில் இது முக்கியமான விஷயமாகும்.

சேமிப்பின் வழியே கனவு

உங்கள் மகன் சைக்கிள் வேண்டும் என்று கேட்டால், "உன் பணத்தில் எவ்வளவு சேமித்துக் கொடுப்பாய்?" என்று கேட்கலாம். "சைக்கிளின் விலை இவ்வளவு. நீ ஆறுமாதம் இவ்வளவு சேமித்துக் கொடுத்தால் நான் மீதி பணத்தை கொடுத்து சைக்கிள் வாங்கித்தருகிறேன்," என்று கூறலாம். இதேபோன்று பிள்ளைகளின் கனவு திட்டங்களை சேமிப்பின் மூலம் அடைவதற்கு ஊக்குவிக்கலாம். அது தங்கள் விருப்பங்களை குறுக்குவழியில் அல்லாமல் சேமிப்பின் மூலம் அடைய அவர்களை பயிற்றுவிக்கும்.

செயலி உதவி

இதையெல்லாம் செய்வதற்கு எனக்கு விருப்பம்தான். ஆனால் நேரமில்லை என்று கூறுகிறீர்களா? பணத்தை நிர்வகிக்க உதவும் பல்வேறு செயலிகள் (mobile app and prepaid card-based solutions) இப்போது பயன்பாட்டில் உள்ளன. அவற்றை உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவி உடனடியாக பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

5-Tips-To-Help-You-Exercise-Your-Brain
மூளை ஷார்ப்பா வேலை செய்யணுமா?
What-is-encephalitis-how-did-53-children-die-in-India
மூளைக்காய்ச்சல்: காரணங்கள், விளைவு, காப்பு முறைகள்
spouse-emotionally-unavailable
ஒரே வீட்டில் இரு அந்நியர்: மன விலக்கத்தில் தம்பதியர்
5-easy-homemade-scrubs-for-gorgeous-skin
அசத்தும் அழகு பெற எளிய வழிகள்
Control-Anger-Before-It-Overpowers-You
கோபமாக இருக்கும்போது பேசாதீர்கள்
Eye-Trouble-7-Signs-You-Need-To-Get-Glasses-Right-Now
பார்வை பிரச்னை: அறிகுறிகள் எவை?
Easy-ways-to-become-morning-person
காலையில் எழுவது கடினமாக உள்ளதா? சில டிப்ஸ்
How-to-sleep-well-despite-the-hot-weather
கோடை இரவில் நன்றாக உறங்குவது எப்படி?
Palpitations-How-To-Handle
நெஞ்சு படபடப்பு: என்ன செய்வது?
How-do-nurture-both-easy-and-difficult-child-Parenthood
சமர்த்தும் சண்டை கோழியும்: பிள்ளைகளை எப்படி சமாளிப்பது?

Tag Clouds